Amazing Health Benefits of Curry leaves - கறிவேப்பிலை - மனித உடலுக்கு அதனால் உண்டாகும் நன்மைகள் - ஒரு ஆய்வு
இந்திய மண்ணின் ஒப்பற்ற மூலிகை வரம் = கறி வேப்பிலை செடி ஆகும்.
தென்னிந்தியாவில் இதை சமையலுக்கு உபயகோபடுத்தாத ஒரு சமையல் அறை இருக்காது என்பது நிச்சயம்.
நாம் தெரிந்து கொள்ளளவேண்டியது என்னவென்றால் கறி வேப்பிலை என்ற ஒரு உன்னதமான செடி மூலிகை சமையலை தவிர மற்ற மருத்துவ உபயோகரங்களுக்காகவும் பயன் படுத்த முடியும் , சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், குடல் வியாதி போன்றவைகளுக்கு கறி வேப்பிலை ஒரு உன்னத மருந்து ஆகும்.
Diabetes Management
நீரிழிவு நோய் கட்டு படுத்துதல்
ஒரு மருத்துவ ஆய்வின் படி, தொடர்ந்து கறி வேப்பிலையை உட்கொண்டால் உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு படி படியாக பூரணமாக குறைந்து வரும் ஏனென்றால் அதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் (anti oxidant) அதிகம் உள்ளது. இந்த ஒரு வேதிய பொருளினால் உடலில் உள்ள மாவு சத்து க்ளுகோஸ் (Glucose) ஆக மாறாமல் தடுக்கும் தன்மையை பெற்றிருக்கிறது.
இதனால் சர்க்கரை அழுத்த நோய் (Diabetes) கட்டுக்குள் வர மிகவும் உபயோகமாக உள்ளது.
Beneficial during Pregnancy phase
கறி வேப்பிலை மகப்பேறு தருணத்தில் செய்யும் நன்மைகள்
மகப்பேறு தருணத்தில் மகளிர் கறி வேப்பிலையை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால், வழக்கமாக காலையில் வரும் வாந்தி (Morning sickness) முற்றும் கட்டுக்குள் கொண்டு வந்து விடும்.
இந்திய விவசாய ஆய்வின் படி கறி வேப்பிலையின் வேதிம கூறுகள் உடலின் ஜீரண தன்மையை அதிகரித்து வழக்கமாக தாய்மை அடைந்த மகளிர்க்கு வாந்தி (Vomit) மற்றும் குமட்டல் (Nausea) வரும் நிலையை கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது.
Good for Skin, Hair and Scalp
கறிவேப்பிலை தோல் , தலைமுடி, மற்றும் உச்சந்தலையை பாதுகாக்கிறது
கறிவேப்பிலையின் மற்ற ஒரு பிரதான குணாதிசயம் , அதை வெறும் வாயில் மென்று சுவைத்தால், கறிவேப்பிலை உடல் சருமத்தில் உள்ள துளைகளின் வாயிலில் தோன்றும் தொற்று கிருமிகளை அழிக்கும் தன்மையை பெற்று , உச்சந்தலையில் உள்ள பி ஹ இருப்பை (pH balance) (potential hydrogen)சமன் செய்து பொடுகு நாசினியாக செயல் படுகிறது.
இனி மேல் கறிவேப்பிலை இலைகளை உங்கள் உணவில் இருந்தால் தயவு செய்து அதை தூக்கி எரியாமல் அதை எடுத்து மென்று விடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
ETHNIC & PURE OIL AND FOODS
RAMAPURAM, CHENNAI 600 089
ETHNIC & PURE COLD PRESSED OILS
CALL 91-98844 29812
91-9841762617
FOR FREE HOME DELIVERY ANYWHERE IN CHENNAI
OTHER OUTSTATIONS 1 - 2 DAYS DELIVERY.
For a Healthy and Happier Living
Comments
Post a Comment